தமிழ்நாடு அரசு ,இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இருக்கண்குடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அன்னதானத் திட்டத்தில் உள்ள துப்புரவு பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
விண்ணப்பங்களை அலுவலக வேலை நேரத்தில் நேரிலோ அல்லது https://irukkangudimariamman.hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.03.2023 மாலை 5 மணிக்குள்
பதவியின் பெயர் : துப்புரவு
ஊதியம் 10,000 – 31500
காலி பணியிடங்களின் எண்ணிக்கை :1
கல்வித் தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
நிபந்தனைகள் :
விண்ணப்பதாரர்கள் 1.7. 2022 அன்று உள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது நிறைவடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
இருக்கண்குடி,
சாத்தூர் வட்டம்,
விருதுநகர் மாவட்டம் -626202
விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
Notification Click here
https://irukkangudimariamman.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=35702