Tamilnadu Litigation Department Office Assistant Recruitment 2022

Tamilnadu Litigation Department Office Assistant Recruitment 2022

அரசு வழக்காடல் துறை அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கீழ்கண்ட மாதிரி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

பணிபுரியும் இடங்கள் : சென்னை மற்றும் மதுரை

காலிப்பணியிடங்கள் : 27 பதவிகள் கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்.

தேர்வுக்கான தகுதி விவரம் :

கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன்னாள் படைவீரர்களுக்கு இக்கல்வித்தகுதி வலியுறுத்தப்படமாட்டாது.

நான்கு சக்கர வாகன உரிமம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு 1.7.2021 அன்று உள்ள 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

பொது வகுப்பினருக்கு 32, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 34 வயது மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 37 வயது மிகாமலும் இருக்க வேண்டும்

இதர விவரங்கள் : அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய அடையாள சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை தகுதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ரூபாய் 50/- அஞ்சல் தலையுடன் கூடிய சுய முகவரியிட்ட உறையுடன் “அரசு தலைமை வழக்குரைஞர், உயர் நீதிமன்றம், சென்னை- 600 104” என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.6.2022 அன்று மாலை 5:45 வரை விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாளுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றிதழ்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

TN Litigation Department Office Assistant 2022 Application Form PDF Download,TN Litigation Department Office Assistant Recruitment 2022 , N Litigation Department Office Assistant Job Notification 2022,TN Litigation Department: 27 Office Assistant Posts 2022,

Tamilnadu Litigation Department Office Assistant Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *