
கால்நடை பராமரிப்புத்துறையில் ஆய்வக உடனாள் பணிக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்காணல்..!
சிவகங்கை மாவட்டம் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஆய்வக உடனாள் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் தகுதியான நபர்களுக்கு நேர்காணல் ஆய்வக உடனாள் பதவிக்கு 29.4.2002 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது.
DEPARTMENT OF ANIMAL HUSBANDRY, SIVAGANGAI DISTRICT
RECRUITMENT OF LAB ATTENDER POST (AS ON 01.07.2019)
ONE POST -GT PRIORITY
APPLICATIONS RECEIVED FROM 21.01.2020 TO 08.02.2020 (DIRECT/POSTAL) AND RECEIVED EMPLOYMENT LIST
DATE OF INTERVIEW :29.04.2022
PLACE: MARUTHUPANDIYAR GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL,
COLLECTORATE CAMPUS, SIVAGANGAI-630562
மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஆட்சியரக வளாகம், சிவகங்கை – 630 562 என்ற முகவரியில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
மேற்படி நேர்காணலுக்கு தகுதியான நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட தகுதியான நபர்கள் மற்றும் அழைக்கப்படாத தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபர்களின் பெயர் பட்டியல் பதவி வாரியாக https://sivaganga.nic.in/ என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியலைப் பார்த்து உரிய காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
தகுதியான நபர்களில் அழைப்பாணை கிடைக்கப்பெறாத நபர்கள் மேற்படி இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகுதியான பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால் சுழற்சி எண் அறிந்துகொண்டு தகுந்த ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள சிவகங்கை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அதன் நகலை பெற்றுக் கொள்ளலாம் என்றும்,
நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத்தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
Animal Husbandry Department – Lab Attender Post Interview
TNAHD Lab Attender Post Interview Click here