Animal Husbandry Assistant Interview Date & Time Details

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் , கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்முகத்தேர்வு அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேர்வு 25.4.2022 முதல் 02.05.2022 வரை( ஞாயிறு நீங்கலாக) நடைபெற உள்ளது.

சுனாமி கட்டிடம் , கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம் , புதுக்கிராமம் தூத்துக்குடி என்ற முகவரியில் தினமும் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பு கடிதம் தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டு உள்ளது எனவும் நேர்முக அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அழைப்பானை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறவில்லை என்றால் தகுந்த ஆதாரங்களுடன் தூத்துக்குடி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் 30.4.2022 க்குள் அணுகிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்முக அழைப்பானை இல்லாதவர்கள் நேர்முகத்தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Animal Husbandry Assistant Interview Date & Time Details Click here

Animal Husbandry Assistant Interview Date & Time Details Click here

கால்நடை பராமரிப்பு உதவியாளரின் பணிகள் :–

கால்நடை நிலையத்தை சுத்தமாக வைத்திருத்தல்

கால்நடை மருத்துவர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது உதவி செய்தல்.

கால்நடைகளுக்கு ஏற்பட்ட புண்கள் , காயங்கள் போன்றவற்றுக்கு மருந்துகள் போடுதல்.

முகாம்களுக்கு பொருட்கள் மற்றும் மருந்துகளை எடுத்து வருதல் கொண்டு செல்லுதல் .

அலுவலர்கள் கோரும் அனைத்து அலுவலக பணிகளையும் செய்தல்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *