TNCSC Recruitment 2024-2025 | TNCSC | TamilNadu Civil Supplies Corporation Recruitment 2024 | TNCSC NOTIFICATION 2024 | https://www.tncsc.tn.gov.in/
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024-2025
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2024-2025
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மயிலாடுதுறை மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2024 -2025 கொள்முதல் பணிக்காக பருவ கால பட்டியல் எழுத்தர், பருவ கால உதவுபவர் பணியிடங்களுக்கு ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்தும் மற்றும் பருவ கால காவலர் பணியிடங்களுக்கு ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்தும் மட்டும் கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மயிலாடுதுறை மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர் 50, உதவுபவர்-80, காவலர் -20 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பட்டியல் எழுத்தர் பணி
காலியிடங்கள் : 50
கல்வித்தகுதி : இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு தேர்ச்சி
உதவுபவர் பணி
காலியிடங்கள் : 80
கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி
காவலர் பணி
காலியிடங்கள் : 20
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 01.07.2024 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -32
BC / BCM / MBC / DNC : 34
SC / ST / SCA : 37
மயிலாடுதுறை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் / பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முகவரி :-
மேற்காணும் தகுதியுடைய மயிலாடுதுறை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து கல்வி சான்றிதழ் நகல்களுடன் முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மயிலாடுதுறை மண்டல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அலுவலக வேலை நாட்களில் 23.12.2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 23.12.2024