சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுநர் பணிக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1.7.2024 அன்று உள்ளவாறு 35 வயது நிரம்பியவராக இருந்தால் வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை.
B.Ed கல்வி தகுதியுடன் பி. இ கணினி அறிவியல் அல்லது பிஎஸ்சி கணினி அறிவியல் அல்லது பிசிஏ அல்லது பிஎஸ்சி தகவல் தொழில்நுட்பம் ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
மாத தொகுப்பூதியம் ரூபாய் 15,000 வழங்கப்படும்.
மேற்காணும் தகுதி உடையவர்கள் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம்- 636 008 என்ற முகவரியில் 20.11.2024 மாலை 5 மணிக்குள் அனைத்து கல்வி தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Recruitment
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
District Differently Abled Welfare Office News-15.11.2024 | Computer Operator Recruitment | 15/11/2024 | 20/11/2024 | View (64 KB) |