TN Police Horse Maintainer Recruitment 2023

TN Police Horse Maintainer Recruitment 2023

தமிழ்நாடு அரசு காவல்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

காலியிடங்களை நிரப்புவது தொடர்பான காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் அவர்களின் செய்தி குறிப்பு:-

குதிரைப்படையில் கீழ்காணும் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் :

பதவியின் பெயர் : குதிரை பராமரிப்பாளர்

காலியிடங்கள்

10

ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

ஊதிய விவரம் :

ஊதிய விவரம் : ₹ 15,700 முதல் ₹ 50,000 வரை

நீர்வளத்துறையில் கிளார்க் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

வயது

வயது 31.3.2023 அன்று 18 வயது முடிந்தவராகவும் அவரவர் பிரிவிற்கு உரிய 30, 32, 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

இதர பிரிவினர்-30

பிற்படுத்தப்பட்டோர்-32

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-32

பழங்குடியினர்-35

ஆதிதிராவிடர்-35

அருந்ததியினர்-35

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

கல்வித் தகுதி :

கல்வித் தகுதி : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க இருக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி :

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி :03.04.2023 மாலை 5.00 மணி

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
குதிரை பராமரிப்பாளர் விண்ணப்பம்,
காவல் ஆணையாளர் அலுவலகம்,
சென்னை பெருநகர காவல்,
வேப்பேரி, சென்னை -7

விண்ணப்பதாரர்கள் அவரவர் அசல் சான்றிதழ்களை சரிபார்க்கும் நாள் மற்றும் இடம்:

17.04.2023 காலை 7.00 மணி
இடம் : ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், ருக்குமணி லட்சுமிபதி சாலை(மார்ஷல் சாலை),
எழும்பூர் , சென்னை -8

விண்ணப்பிக்கும் முறை :-

ஒரு வெள்ளை தாளில் விளம்பரத்தில் அளிக்கப்பட்டுள்ள மாதிரி படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பம் அனுப்ப வேண்டும் கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

17.4.2023 அன்று சான்றிதழ்களை சரிபார்க்க ஆஜராக வேண்டும். ஆஜராகாவிட்டால் உங்களது விண்ணப்பம் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மீண்டும் உரிமை கோர இயலாது.

இப்பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் பணி நிமித்தமாக அவ்வப்போது உருவாக்கப்படும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணிபுரிய வேண்டும்.

தமிழ்நாடு அரசு நீதி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

குதிரை பராமரிப்பாளர்களின் வேலைகள்:-

தினமும் காலை 4.30 மணிக்கு அறிக்கை செய்ய வேண்டும்.

குதிரைகளை எழுப்ப வேண்டும்.

குதிரைகள் படுத்திருந்த வைக்கோல்களை அகற்ற வேண்டும்.

குதிரை லாயத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

குதிரைகளின் சாணங்களை அதற்குரிய இடத்தில் கொண்டு போய் நிரப்ப வேண்டும்.

குதிரைகளின் உடம்பில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்தல் வேண்டும்.

குதிரைகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை இடைவெளி விட்டு தீவணம் வைக்க வேண்டும்.

குதிரைகளுக்கு லாடம் கட்டும்பொழுது லாடம் கட்டுபவருக்கு உதவி செய்ய வேண்டும் அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

குதிரைகளை கால்நடை மருத்துவமனைக்கு மாதந்தோறும் ஒரு முறையும் மற்றும் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அழைத்துச் செல்ல வேண்டும். குதிரை உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டால் உடனிருந்து கவனிக்கப்பட வேண்டும்.

குதிரைகளுக்கு அதற்குரிய நேரத்தில் தண்ணீர் காட்ட வேண்டும்.

பணிக்கு சென்று திரும்பும் குதிரைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை குதிரைகளை குளிக்க வைக்க வேண்டும்.

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *