
தமிழக அஞ்சல் துறை சார்பில் அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் தேர்வுக்கு நேர்காணல் தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் மே 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
தாம்பரம் கோட்டம் அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் ஆர்வமுள்ளவர்கள் தகுதியான மூல சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்
பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் தேதியில் விண்ணப்பதாரரின் வயது குறைந்த பட்சம் 18 ஆகவும் அதிகபட்சம் 50 ஆகவும் இருக்கலாம்.
வேலைவாய்ப்பு இல்லாத, சுய வேலை செய்கின்ற இளைஞர்கள், ஏதாவது ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள் , முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இது அரசு வேலை அல்ல, முழுமையாக கமிஷன் அடிப்படையிலான பணியாகும்.
தேர்வு செய்யப்படுவோர் தேசிய சேமிப்புச் சான்றிதழ் அல்லது குடியரசுத் தலைவரின் பெயரில் உறுதியளிக்கப்பட்ட கிசான் விகாஸ் பத்திர வடிவில் ரூபாய் 5000 காப்பீட்டு தொகையாக செலுத்த வேண்டும் தற்காலிக உரிம கட்டணமாக ரூபாய் 50 செலுத்தவேண்டும்.
விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம், பான் கார்டு அல்லது ஆதார் அட்டையின் நகல், கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
TamilNadu Post office Agent Recruitment 2022