Tamilnadu Govt Clerk Posts Recruitment 2022

தமிழ்நாடு அரசு அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வழக்கு எழுத்தர் -01

சம்பளம் ரூ.18500-58600

சீட்டு விற்பனை எழுத்தர் -01

சம்பளம் ரூ.18500-58600

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1.7.2021 அன்று உள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இந்து மதத்தை சார்ந்தவராகவும் , தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்த அந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றிதழ் மற்றும் இதர விபரங்களுடன் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்படவேண்டும்.

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.

விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது.

இத்திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை ரூபாய் 100 செலுத்தி விண்ணப்ப படிவம் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்,

பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் -641010

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 28.6.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *