Applications are invited for the post Record Clerk in Department of Land Survey and Records.
அரியலூர் மாவட்டம் நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில்
காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை.
அறிவிக்கை எண்: 01/2025/அ4
அரியலூர் மாவட்டம் நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர்
அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம்
பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 09.02.2026 முதல்
09.03.2026 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதிவுரு எழுத்தர்
நிலை-02 (ரூ.15900 – ரூ. 58500)
General –
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல்
BC/BCM/MBC/DC –
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல்
SC/ST பிரிவினருக்கு –
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல்
மொத்த காலிப்பணியிடங்கள் 01 (ஒன்று)
. பொதுப்பிரிவு / GTGL (Periority)
முன்னுரிமை – கொரோனா தொற்றினாலோ, இதர
காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள்
(மகன் / மகள்).
Heirs (Sons / Daughters) Who have Lost both Father and Mother due
Covid-19 or Other reasons
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தவராக
இருக்க வேண்டும்.
கணினி பற்றிய அடிப்படை அறிவு (Basic Computer
Knowledge)
தவி இயக்குர்,
மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை,,
முதல் தளம், அறை எண்.119, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
அரியலூர்
தேர்வு முறை
அ. வாசித்தல் மற்றும் எழுதும் திறனின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வாகும்
விண்ணப்பதாரர்கள் 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில் நேர்முக
தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.
ஆ. திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு குறித்த விவரங்கள் மாவட்ட நில
அளவை அலுவலக தகவல் பலகையில் அறிந்துக்கொள்ளலாம்.
நிபந்தனைகள்:-
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை
சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.விண்ணப்பதாரருக்கு 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
இனசுழற்சி, வயது மற்றும் கல்வி ஆகிய இனங்களில் போதிய தகுதி இல்லாத
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரர் அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள்
மேற்கொள்ளப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அரியலூர்
மாவட்ட நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில்
நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 09.03.2026 (திங்கட்கிழமை) அன்று
பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். காலம்
கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும்
தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) அனுப்பி வைக்கப்படும்.
பதிவுரு எழுத்தர்களுக்கான விண்ணப்ப படிவம் அரியலூர் மாவட்ட நிலஅளவைப்
பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், அரியலூர் மாவட்ட
இணையதளம் https://ariyalur.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.
| Title | Description | Start Date | End Date | File |
|---|---|---|---|---|
| Recruitment – Department of Land Survey and Records | Applications are invited for the post Record Clerk in Department of Land Survey and Records.Last Date for Apply : 09.03.2026 , Time 5.45 PM | 09/02/2026 | 09/03/2026 | View (489 KB) Application (106 KB) |