Tamil Nadu State Election Commission Recruitment 2025 | Office Assistant Posts

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.
எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை, அரும்பாக்கம், சென்னை-600 106.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலக உதவியாளர் காலிப்பணியிட அறிவிக்கை

மிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் நிலையில் ஏற்பட்டுள்ள
காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர்-07

ரூ.15,700/- – ரூ.50,000/- (Level 1) என்ற ஊதிய அட்டவணையில் அரசு
நிர்ணயம் செய்த இதர படிகளுடன்

வயது வரம்பு

OC பொது பிரிவு 18 -32

MBC/DNC/BC/BCM : 18-34

SC/ST/SCA : 18-37

01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க
வேண்டும். மேற்கண்ட தேதியில் அதிக பட்ச வயது வரம்பு
பூர்த்தியடைந்தவராக இருக்கக்கூடாது.

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

Xerox மற்றும் Printer இயந்திரங்கள் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்ப படிவம் https://tnsec.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காலம் 18.12.2025 முதல் 02.01.2026 மாலை 5.00 மணி வரை

Last Date : 02.01.2026 மாலை 05.00 மணி

தலைமை நிர்வாக அலுவலர்,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்,

எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை,

அரும்பாக்கம், சென்னை-600 106.

நிபந்தனைகள்

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் – https://tnsec.tn.gov.in என்ற இணையதள
முகவரியில் இருந்து மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அனைத்து
கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, கல்வித்தகுதி. சாதிச்சான்று. முன்னுரிமை
சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களில் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை
இணைத்து முன் குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான இனசுழற்சி, வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து
வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1(10 x 4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

அரசு விதிகளின் படி முன்குறிப்பிட்ட இனச்சுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும்
தேதி குறித்த தகவல் விரைவஞ்சல் / மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

நியமன எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ அல்லது எத்தகைய
காரணமும் குறிப்பிடாமல் நியமனத்தை இரத்து செய்யவோ ஆணையத்திற்கு அதிகாரம்
உள்ளது.

விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். 02.01.2026

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஊர்தி ஓட்டுநர் காலிப்பணியிட அறிவிக்கை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் ஊர்தி ஓட்டுநர் நிலையில் ஏற்பட்டுள்ள
காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் ஊர்தி ஓட்டுநர்-02

ரூ.19,500/- – ரூ.62,000/- (Level 8) என்ற ஊதிய அட்டவணையில்
அரசு நிர்ணயம் செய்த இதர படிகளுடன்

தகுதிகள் 1) 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988-ன்படி உரிய அதிகாரம்
பெற்ற அலுவலரால் வழங்கப்பட்ட இலகுரக
வாகனங்களுக்கான செல்லத்தக்க உரிமம்
Auto mechanism with First Aid-ல் அனுபவம் பெற்றுள்ளதற்கான
சான்றிதழ்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஊர்தி ஓட்டுநர் காலிப் பணியிட அறிவிக்கை மற்றும் விண்ணப்பப் படிவம்Click here
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலக உதவியாளர் காலிப் பணியிட அறிவிக்கை மற்றும் விண்ணப்பப் படிவம்Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *