Village Assistant Recruitment Notification (Revised)– 2025

village assistant recruitment 2025 notification tamilnadu, village assistant notification 2025, tn village assistant recruitment 2025, village assistant recruitment 2025, village assistant job notification 2025, tamil nadu village assistant notification 2025, district wise village assistant notification 2025, tamilnadu village assistant recruitment 2025, tn village assisitant notification 2025, village assistant recruitment 2025 pdf download

ஈரோடு மாவட்டம், சம்மந்தப்பட்ட வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்
பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக இவ்வலுவலக அறிவிக்கை
எண்.01/2025 நாள்: 07.07.2025-ன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நேர்வில்,
தற்போது அதிகபட்ச வயது வரம்பு தளர்வு செய்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

(குறிப்பு: இவ்வலுவலக அறிவிக்கை எண்.01/2025 நாள்:07.07.2025-ன்படி ஏற்கனவே
விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை).

விண்ணப்பம் செய்வதற்கான கடைசிநாள் : 06.10.2025 மாலை 5.45 மணிவரை..

ரூ.11,100-35,100 (சிறப்புகாலமுறை ஊதியம்) அட்டவணை -IV நிலை 6

தேர்வுமுறை :
அ. மிதிவண்டி/ இருசக்கரவாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதும்
திறன்
ஆ. நேர்காணல்

வயது (01.07.2025 அன்று):

இதர பிரிவினர் / பொதுப்பிரிவினர் : 21-32

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் / பிற்பட்ட வகுப்பினர் /
பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) : 21-39

அட்டவணை வகுப்பினர்/ அட்டவணை வகுப்பினர் (அருந்ததியினர்) /
பழங்குடியினர் / ஆதரவற்ற விதவை (எந்த பிரிவினராக இருந்தாலும்) : 21-42

வயது வரம்புச் சலுகை:
முன்னாள் இராணுவத்தினர் (01.07.2025 அன்று)
பொதுப்பிரிவினர் அதிகபட்சம் 50 வயது
இதரப்பிரிவினருக்கு அதிகபட்சம் 55 வயது

மாற்றுத் திறனாளிகள்
மாற்றுத் திறனாளிகள் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பத்தாண்டு வரை வயது
வரம்புச் சலுகை பெற தகுதியுடையவர்கள். ஆனால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ள
பதவியினை திறமையுடன் செய்து முடிப்பதற்கு அவருடைய குறைபாடு தடையாக
இல்லாமல் இருக்கிறதென்றால் தகுதியுடையவராவார். (தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள்
(பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு -64)

கல்வித் தகுதி (01.07.2025 அன்று உள்ளபடி)
தமிழ்நாடுஅரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதிவகுப்புசான்றிதழ் தேர்வில்
(SSLC – Secondary School Leaving Certificate Examination) தமிழை ஒருபாடமாகக்
கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். (தேர்ச்சி/தோல்வி) (மதிப்பெண்
பட்டியல் கட்டாயம் சமர்பிக்கப்பட வேண்டும்)
தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

village assistant recruitment 2025 notification tamilnadu, village assistant notification 2025, tn village assistant recruitment 2025, village assistant recruitment 2025, village assistant job notification 2025, tamil nadu village assistant notification 2025, district wise village assistant notification 2025, tamilnadu village assistant recruitment 2025, tn village assisitant notification 2025, village assistant recruitment 2025 pdf download

இதர தகுதிகள்:
மிதிவண்டி/இருசக்கர வாகனம் ஓட்டும் திறன்
பணி நியமனம் செய்யப்படுவதற்கு அவருடைய ஒழுக்கமும் முன்வரலாறும் அவரைத்
தகுதிப்படுத்துவனவாக இருக்க வேண்டும்.
இருதாரமணம் :
ஆண் விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவராக
இருத்தல் கூடாது.
விண்ணப்பதாரர் பெண்ணாக இருப்பின், ஏற்கனவே மனைவியுடன்
வாழும் ஒருவரைத் திருமணம் செய்தவராக இருத்தல் கூடாது.

விண்ணப்பதாரர் சம்மந்தப்பட்ட வட்டத்தைச் சேர்ந்தவராகவும், சம்மந்தப்பட்ட வட்ட
எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். நிரந்தர முகவரிக்கு
ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை / ஆதார் அட்டை / குடும்ப அட்டை /
ஓட்டுநர் உரிமம் மற்றும் இருப்பிட சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

முன்னுரிமை :

ஒன்றாம் வகுப்பு முதல், தொடர்புடைய பணி விதிகளில் நேரடி
நியமனமுறைக்கென வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிவரை (10 ஆம் வகுப்பு)
முழுவதுமாகத் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் தகுதியுடையவர்கள்
ஆவர். (விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பட்ட வழிமுறைகளின் மூலம் தமிழ்
வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை உறுதி செய்ய இயலாத நிலையில்
தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை அரசாணை (நிலை)
எண்.82, மனிதவள மேலாண்மை (எஸ்) துறை, நாள்.16.08.2021 இல்
இணைப்பு 1 மற்றும் II இல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் சம்மந்தப்பட்ட கல்வி
நிறுவனங்களிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்)

(அ) கொரோனா தொற்றினால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள்
(மகன்/மகள்) நேர்வில் கோவிட் 19 இறப்பு உறுதிப்படுத்தும் குழுத்தலைவரால்
ஒப்பமிடப்பட்ட கோவிட் இறப்பிற்கான அலுவலர் ஆவணச் சான்றிதழ்
அடிப்படையில் முன்னுரிமை பெறத் தகுதியுடையவராவார்கள்.
(ஆ) இதர காரணங்களினால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள்.
(மகன் / மகள்) (இ) தனியார் மற்றும் அரசால் நடத்தப்படும் அனாதை இல்லங்களில் தங்கி
பயின்று வளர்ந்து வரும் தாயையும், தந்தையையும் இழந்த வாரிசுதாரர்கள்
அந்த இல்லங்களிலிருந்து பெறப்படும் சான்றிதழின் அடிப்படையிலும்,

(ஈ) அங்கீகரிக்கப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் சேரமுடியாத கிராமப்புற
தாய், தந்தையற்ற நபர்கள் வருவாய் வட்டாட்சியர் மூலம் பெறப்படும் “தாய்
தந்தையற்றோர்” சான்றிதழ் அடிப்படையிலும் முன்னுரிமை பெற
தகுதியுடையவர்களாவார்.

(3) முதல் தலைமுறை பட்டதாரி சான்றின் அடிப்படையில் முன்னுரிமை
கோருவோர் இவ்வறிவிப்பாணை வெளியாகும் தேதிக்கு முன்னதாக மண்டல
துணை வட்டாட்சியரால் வழங்கப்பட்ட முதல் தலைமுறை பட்டதாரி
சான்றினை பெற்றவராக இருக்க வேண்டும்.
(4) தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்.
(5) முன்னாள் இராணுவத்தினர்.
(6) போரில் மரணமடைந்த அல்லது உடல் தகுதியை இழந்த இராணுவ
வீரர்களின் குடும்பத்தினரில் இரண்டு நபர்கள் வரை.
(7) ஆதரவற்ற விதவை (Destitute Widows) அடிப்படையில் முன்னுரிமை
கோருவோர் இவ்வறிவிப்பாணை வெளியாகும் தேதிக்கு முன்னதாக சார் ஆட்சியர்/வருவாய் கோட்ட அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை
பெற்றவராக இருக்க வேண்டும்
(8) கலப்பு திருமண தம்பதியினர் (தம்பதியரில் ஒருவர் அட்டவனை வகுப்பினர்
அல்லது பழங்குடி இனத்தவராக இருக்க வேண்டும்)
(9) மாற்றுத்திறனாளிகள் (மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016, பிரிவு
57-இல் உட்பிரிவு (1)ன்படி, அரசால் நியமிக்கப்பட்டுள்ள சான்றளிக்கும்
அலுவலரால் வழங்கப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்)

village assistant recruitment 2025 notification tamilnadu, village assistant notification 2025, tn village assistant recruitment 2025, village assistant recruitment 2025, village assistant job notification 2025, tamil nadu village assistant notification 2025, district wise village assistant notification 2025, tamilnadu village assistant recruitment 2025, tn village assisitant notification 2025, village assistant recruitment 2025 pdf download

இட ஒதுக்கீடு :
கிராம உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வில் இனச்சுழற்சி விதிகள்
பின்பற்றப்படும்.
நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்களில் பெண்களுக்காக
ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தெரிவு செய்யப்பட தேர்ச்சியும், தகுதி வாய்ந்த
பெண் விண்ணப்பதாரர்கள் கிடைக்கப்பெறாதவர்கள் அவர்களுக்கென
ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் அதே வகுப்பைச் சேர்ந்த தகுதி வாய்ந்த
ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும் (தமிழ்நாடு
அரசுப்பணியாளர்கள் (பணி முறைமைகள்) சட்டம் 2016, பிரிவு 26 (5)-இல்
குறிப்பிட்டுள்ளவாறு.

  1. திருநங்கை விண்ணப்பதாரர்களுக்கான இட ஒதுக்கீடு :
    (a) திருநங்கை விண்ணப்பதாரர்களில் பெண் என தன்னை அடையாளப்
    படுத்திக் கொள்ளும் விண்ணப்பதாரர் பெண்களுக்கான 30 சதவீதம்
    மற்றும் பொதுப் பிரிவினருக்கான 70 சதவீதம் (ஆண் மற்றும் பெண்)
    ஆகிய இரண்டு இட ஒதுக்கீட்டின் கீழும் கருதப்படுவர்.
    (b) திருநங்கை விண்ணப்பதாரர்களில் ஆண் அல்லது மூன்றாம் பாலினத்தவர்
    என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் விண்ணப்பதாரர் பொதுப்
    பிரிவினருக்கான 70 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் (ஆண் மற்றம் பெண்)
    கருதப்படுவர்
    (c) தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தில் இருந்து பெறப்பட்ட
    திருநங்கைகள்/திருநங்கை (ஆண்)/திருநங்கை (பெண்) சான்றிதழ்
    கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட இட ஒதுக்கீடு|
    பொருந்தும்.
    (d) திருநங்கைகள்/திருநங்கை (ஆண்)/திருநங்கை (பெண்) தொடர்பான
    தகவல்கள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட
    அடையாள அட்டையின் மூலம் சரிபார்க்கப்படும். இதில் முரண்பாடு
    இருப்பின் விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பின்னர்
    நிராகரிக்கப்படும்.

    (e) சாதிச்சான்றிதழ் வைத்துள்ள அட்டவணை வகுப்பினர்/ அட்டவணை
    வகுப்பினர் (அருந்ததியர்) / பழங்குடியினர் வகுப்பினைச் சார்ந்த
    திருநங்கை விண்ணப்பதாரர் அவர்களது சமூகத்தினைச்
    சார்ந்தவர்களாகவே கருதப்படுவர்.
    (f) அட்டவணை வகுப்பினர் / அட்டவணை வகுப்பினர் (அருந்ததியர்) /
    பழங்குடியினர் வகுப்பைத் தவிர மற்ற வகுப்பினைச் சார்ந்த மற்றும்
    அப்பிரிவின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் பெற்றுள்ள திருநங்கை
    விண்ணப்பதாரர் அவருடைய வகுப்பு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட
    வகுப்பு ஆகிய இரண்டு வகுப்புகளில் அவருக்கு சாதகமாக தோன்றுகின்ற
    ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
    (g) சாதிச்சான்றிதழ் இல்லாத திருநங்கைகள், தங்களை மிகவும்
    பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக விண்ணப்பத்தில் குறிப்பிடும் பட்சத்தில்
    ஏனையோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட
    வகுப்பினர் முஸ்லீம்/சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த திருநங்கைகள்
    சாதிச்சான்றிதழ் வைத்திருந்தாலும் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட
    வகுப்பினராக கருதும்படி விண்ணப்பத்தில் குறிப்பிடும் பட்சத்தில் அவர்கள்
    தங்களது உரிமை கோரலுக்கு ஆதாரமாக சாதிச்சான்றிதழை இணைக்க
    தேவையில்லை. இருப்பினும் அவர்கள் திருநங்கைகளுக்கான அடையாள
    அட்டையை உரிமை கோரலுக்கு ஆதாரமாக இணைக்க வேண்டும்.

    (h) சமூகப் பிரிவினை அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை தேர்வு செய்வது
    தொடர்பாக திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து
    சலுகைகளும் அவர்களால் சமர்ப்பிக்கப்படும் தமிழ்நாடு திருநங்கைகள்
    நலவாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை சார்ந்தே அமையும்.
    விண்ணப்பதாரர் திருநங்கைக்கான அடையாள அட்டையை சமர்ப்பிக்க
    தவறினாலோ அல்லது மற்ற வாரியங்களால் வழங்கப்பட்ட அடையாள
    அட்டையினை சமர்ப்பித்தாலோ விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்கு
    பின்னர் நிராகரிக்கப்படும்.

    1. தெரிவு செய்யும் நடைமுறை :
      மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்படும் பட்டியல் மற்றும்
      நாளேடுகளில் வெளியிடப்படும் அறிவிக்கை மூலம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல்
      மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் இனசுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில்
      இறுதி செய்யப்பட்டு, மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் /
      எழுதுதல் திறனறிதல் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள்
      மற்றும் நியமன இட ஒதுக்கீடு விதியைப் பின்பற்றி தெரிவு செய்யப்படுவர்.
    2. தடையின்மைச் சான்று :
      அரசு பணியாளர்கள் தங்களது துறையிலிருந்து தடையின்மைச் சான்று பெற்று
      சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
    1. விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் :

      அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும்.
      தெரிவு நடைபெறுவதற்கு முன்பு வரை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
      மாறுதலுக்கு உட்பட்டதாகும்.
      விண்ணப்பதாரர்கள் மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல்
      / எழுதுதல் திறன் மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வுகளுக்கு தங்களது சொந்த
      செலவில் வரவேண்டும்.
    2. இப்பதவியில் பணியமர்த்தப்படும் ஒவ்வொருவரும் பதவிப் பொறுப்பிலிருக்கும்
      கிராமத்தில் அப்பதவிப் பொறுப்பில் இருக்கும் காலம் வரை தொடர்ந்து வசிக்க
      வேண்டும்.
    3. மத்திய அல்லது மாநில அரசின் கீழ் உள்ள நிறுவனங்கள், உள்ளாட்சி
      மன்றங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சட்டத்தின் வாயிலாக நிறுவப்பட்ட
      நிறுவனங்கள், அரசுத்துறை கழகங்கள், பல்கலைக் கழகங்கள் முதலியவற்றில்
      முறையாகவோ / தற்காலிகமாகவோ பணிபுரிந்து வருவது/பணிபுரிந்தது
      தொடர்பான ஆவணங்களை கோரும் போது விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க
      வேண்டும்.
    1. விண்ணப்பதாரர் பெயரில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருத்தல், கைது .
      செய்யப்பட்டிருத்தல், குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருத்தல், வேலைக்கு ஆட்கள்
      தெரிவு செய்யும் ஏதேனும் ஒரு முகமையினால் தடை / தகுதியின்மை
      செய்யப்பட்டிருத்தல், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருத்தல்,
      கிளர்ச்சி அல்லது ஏதேனும் அரசியல் அமைப்பில் பங்கேற்பு
      பாராளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் பங்கேற்றல் ஆகியவை குறித்த சரியான
      மற்றும் உண்மையான தகவல்களை விண்ணப்பதாரர் தெரிவிக்க வேண்டும்.
      தொடர்புடைய ஆவணங்களை சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்க
      வேண்டும்.
    2. இட ஒதுக்கீடு வயது, கல்வித்தகுதி மற்றும் இதர அடிப்படைத் தகுதிகள் குறித்து|
      விண்ணப்பதாரர் அளித்த விபரங்கள் தவறு எனத் தெரியவரும் பட்சத்தில்,
      அத்தகைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கை
      மேற்கொள்ளப்படும்.
    1. விண்ணப்பிக்க கடைசி நாள் :
      கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 22.09.2025 முதல்
      06.10.2025 வரை அலுவலக வேலை நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில்
      காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை நேரிலோ அல்லது பதிவஞ்சல்
      மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். காலம் கடந்து வரும் எந்த விண்ணப்பங்களும்
      ஏற்கப்படமாட்டாது.
      குறிப்பு : தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மிதிவண்டி/இருசக்கர வாகனம் ஓட்டும்
      திறன், வாசித்தல் / எழுதுதல் திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றிற்கு
      தனித்தனியே கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

    Village Assistant Recruitment Notification (Revised)– 2025

    TitleDescriptionStart DateEnd DateFile
    Village Assistant Recruitment Notification (Revised)– 2025Applications are invited for the post of Village Assistant on Direct Recruitment basis in the Erode District.
    Relaxation of Upper Age Limit.
    Application Form: Click Here 
    1. Erode :Notification 
    2. Perundurai : Notification 
    3. Modakkurichi : Notification 
    4. Kodumudi : Notification 
    5. Gobichettipalayam :Notification 
    6. Sathyamangalam :Notification 
    7. Bhavani :Notification 
    8. Anthiyur :Notification 
    9.Thalavadi :Notification 
    10.Nambiyur :Notification Note: Notification Published on 07-07-2025 Click Here
    22/09/202506/10/2025

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *