தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)
மண்டல அலுவலகம், செங்கல்பட்டு
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2வது தளம் A பிளாக், வெண்பாக்கம், செங்கல்பட்டு-603111
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், செங்கல்பட்டு மண்டலத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில்
பணிபுரிய பருவகால காலி பணியிடங்களுக்காக முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-வது தளம் A பிளாக், வெண்பாக்கம், செங்கல்பட்டு -603111 என்ற முகவரிக்கு 01.07.2025 அன்றைய தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்த கீழே தெரிவிக்கப்பட்டுள்ள விவரப்படி கல்வி தகுதியுடைய செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டும் உரிய 1) கல்விச்சான்று 2) சாதி சான்று 3) வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்ததற்கான சான்று 4) குடும்ப அட்டை 5) இருப்பிடச்சான்று (Nativity Certificate) 6) வயது உறுதி சான்று 7) ஆதார் அட்டை மற்றும் 8) முன்னாள் இராணுவ வீரராக இருப்பின் அதற்கான சான்று ஆகியவற்றுடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாற்றியமைக்கப்பட்ட Tamil Nadu Civil Supplies Corporation Manual on Paddy Procurement rule chapter VII 16.3 & VII 16.4 -ன்படி பருவகால பட்டியல் எழுத்தர்கள் மற்றும் உதவுபவர்கள் கல்வி மதிப்பெண் பட்டியலுக்கு 50% மதிப்பெண்ணும், நேர்முக தேர்வுக்கு 50% மதிப்பெண் என்ற அடிப்படையிலும், பருவகால காவலர்களுக்கு 100% மதிப்பெண்களும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் நெல் கொள்முதல் தொடர்பானது, முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்பிக்கப்படும் பதவியின் பெயரை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 07.10.2025 பிற்பகல் 5.00 மணிக்குள்