விழுப்புரம் மாவட்ட வருவாய் அலகில், திண்டிவனம்,கண்டாச்சிபுரம்,மேல்மலையனூர்,செஞ்சி,மரக்காணம், வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்பிடதகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழேகொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, கல்வித் தகுதி மற்றும் வயதுவரம்பிற்குட்பட்ட நபர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
அ) விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் : 18.08.2025
ஆ) விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 16.09.2025 மாலை 5.45 மணிக்குள்,
இ) படித்தல் மற்றும் எழுதுதல் திறனறித் தேர்வுநாள் 17.10.2025 (மாறுதலுக்குட்பட்டது)
ஈ) நேர்முகத் தேர்வுநடைபெறும் நாள் 10.11.2025 (மாறுதலுக்குட்பட்டது)
பதவியின் பெயர்: கிராம உதவியாளர்
சம்பளவிகிதம்: சிறப்புகாலமுறை ஊதியம் – Level-06 (ரூ.11,100/- – 35100/-)
கல்வித்தகுதி விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப்பள்ளி இறுதி வகுப்புசான்றிதழ் தேர்வில் (SSLC – Secondary School leaving certificate examination) தமிழ் ஒருபாடமாகக் கொண்டு தேர்வு
எழுதப்பட்டிருக்க வேண்டும். (SSLC – Secondary School leaving certificate examination) மதிப்பெண்
பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும்). (குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்புதோல்வி) |
(01.07.2025-ன்படி வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும்.)
குறைந்தபட்ச வயது – 21 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். (அனைத்து பிரிவினருக்கும்)
அதிக பட்ச வயது – 32 வயது – இதர வகுப்பினர் (GT/OC/FC)
37 வயது – பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் / பட்டியலினத்தவர் /
பழங்குடியினர் (*அரசாணை (நிலை) எண்.91,மனிதவள மேலாண்மைத் (எஸ்) துறை, நாள்: 13.09.2021 படி வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது).
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வரம்புடன் 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் கொள்ளப்படும்.
(Tamilnadu Government Servants (Conditions of Service) Act-2016).
முன்னாள் இராணுவத்தினருக்கு 48 வயது -இதர வகுப்பினர்
53 வயது – பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் / பட்டியலினத்தவர் /
பழங்குடியினர் (Tamilnadu Government Servants (Conditions of Service ) Act-2016).
மேற்படி, பணிக்கான விண்ணப்ப படிவங்களை https://villupuram.nic.in என்ற விழுப்புரம் மாவட்டஆட்சியர்
அலுவலக இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
https://viluppuram.nic.in/notice_category/recruitment
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT | Filling up of vacancies existing for more than three years in the post of village assistant.1.) Kandachipuram(PDF409KB )2.) Tindivanam (PDF657KB )3.) Marakkanam (PDF575KB )4.) Gingee (PDF691KB )5.) Melmalayanur (PDF451KB ) | 18/08/2025 | 16/09/2025 | View (3 MB) |
1.) Kandachipuram(PDF409KB )
2.) Tindivanam (PDF657KB )
3.) Marakkanam (PDF575KB )
4.) Gingee (PDF691KB )
5.) Melmalayanur (PDF451KB )