District Consumer Disputes Redressal Commission Recruitment 2025

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை | நுகர்வோர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், விழுப்புரம் மாவட்டம்

வேலை வாய்ப்பு விளம்பர அறிவிப்பு

அரசாணை நிலை எண்.32, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேம்பாட்டுத்துறை, நாள் 20.04.2022ன்படி பழங்குடியினருக்கான (ST) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமன அறிவிக்கை.

விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடி பிரிவில் காலியாக உள்ள ஒரு (ஒன்று) அலுவலக உதவியாளர் குறைவு பணியிடத்தினை (Shortfall vacancy) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்பிட கீழ்கண்ட விவரப்பட்டி தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
சம்பள விகிதம் : Pay Matrix Rs.15700-58100/-
Basic pay Rs.15700 + DA + HRA
குறைந்த பட்ச கல்வி தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு : பழங்குடி இனத்தவர்
காலி பணியிட எண்ணிக்கை : ஒன்று (1)

01.07.2025ல் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 37-க்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி) மாதிரி விண்ணப்பம் மற்றும் மற்ற விபரங்கள் www.viluppuram.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலே கூறிய தகுதிகள் உள்ள பழங்குடி இனத்தவர் தங்களுடைய கல்வித்தகுதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிக்குரிய சான்றிதழ், வயதுக்குரிய சான்றிதழ், முகவரிக்கான சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பத்தினை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் இணைத்து 25.07.2025 மாலை 05.00 மணிக்கு முன்பாக இந்த அலுவலகத்தில் கிடைத்திடுமாறு கீழ்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உறையின் மேல் “ வேலை வாய்ப்பு விண்ணப்பம் – அலுவலக உதவியாளர்’ ‘ எனக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நகராட்சி சமுதாயக் கூடம்,கிழக்கு பாண்டி ரோடு,
விழுப்புரம் 605 602.

Recruitment

TitleDescriptionStart DateEnd DateFile
District Consumer Disputes Redressal Commission, VillupuramFilling up of the vacancy of one post of Office Assistant for ST by Special Recruitment DriveNotification(PDF162KB  )26/06/202525/07/2025View (29 KB) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *