TNSRLM Recruitment 2022

திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மூன்று வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் ஐந்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வட்டார இயக்க மேலாளர்கள் கல்வித்தகுதிகள் விவரம்:-

ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்,

ஆறு மாத காலம் கணினி பயிற்சி MS Office பெற்று இருக்க வேண்டும்.

கணினி அறிவியல் அல்லது கணினி உபயோகம் குறித்த பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் கல்வித்தகுதிகள் விவரம்:-

ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி MS Office பெற்றிருக்க வேண்டும்.

28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டிருக்கவேண்டும்.

கடைசி நாள் 15.7.2022

விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி :

திட்ட இயக்குநர் / இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், திருவள்ளூர் மாவட்டம்

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *