
Eleven vacancies in the Indian System Medical Research and Development Division are for two guards and two animal keepers; Applications are invited from eligible candidates for temporary employment in the workplace at a lump sum of Rs. 8000 / – respectively.
இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் காலியாகவுள்ள பதினொன்று பல்நோக்கு பணியாளர் இரண்டு காவலர் மற்றும் இரண்டு விலங்கு காப்பாளர் ; பணியிடங்களில் முறையே ரூ.8000 தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணியமர்த்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழில் எழுத படிக்க தெரிந்த 18 வயது நிரம்பியவர்கள் உரிய அலுவலரிடம் இருந்து தங்களது வயது தொடர்பாக பெற்ற சான்றிதழ் உடன் மேற்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
உயர்கல்வி பயின்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவும்.
அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 வயது மற்றும் ஏனைய பிரிவினருக்கு 59 வயது ஆகும்.
தகுதி உடையவர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, வயது, விலாசம், ஆதார் எண், கைபேசி எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து உரிய அலுவலரிடம் இருந்து பெற்ற ஜாதி சான்றிதழ் முன்னுரிமை ஏதேனும் இருப்பின் அதற்கான அலுவலரிடம் இருந்து பெற்ற சான்றுகளின் நகல்களுடன் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் சுய விலாசமிட்ட உரையுடன் கூடிய விண்ணப்பத்தினை சென்னை-600 106, அரும்பாக்கம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை இணைப்பு வளாகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு முதன்மை ஆராய்ச்சி அலுவலர் /இயக்குநர் அவர்களுக்கு 20.6.2022 அன்று மாலை 5 மணிக்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது அவ்வாறு தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் முழுமையாக நிராகரிக்கப்படும்.
Notification Click here