
திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மத்திய பண்ணையில் பால் உற்பத்தியினை பெருக்கிட கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதியை அளிப்பது அவசியமாகிறது.
இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் புதிய கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் கொண்டு செயல்படுத்திட இவ்வொன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் பணி நிலைக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களில் தற்காலிகமாக பணி புரிய விருப்பம் உள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கீழ்கண்ட குறைந்தபட்ச தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை கால்நடை மருத்துவ பட்டப் படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு சான்றிதழ், இரண்டு சக்கரம் அல்லது நான்கு சக்கரம் ஓட்டுநர் உரிமம். வயது வரம்பு 50க்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்டவாறு தகுதி பெற்றுள்ள கால்நடை மருத்துவர்கள் தங்களின் கல்வித்தகுதி பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ் மற்றும் இரண்டு சக்கரம் அல்லது நான்கு சக்கரம் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றுடன் வருகின்ற 22.6.2022 அன்று காலை 11 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் நடைபெற உள்ள நேரடி நியமன தேர்விற்கு முழுமையான தகுதிகள் பெற்ற கால்நடை மருத்துவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Aavin Tiruchirappalli Recruitment 2022 Click here