TN Rural Development and Panchayat Raj Recruitment 2022

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை

Vaazhndhu Kaattuvom Project
(Tamil Nadu Rural Transformation Project)
Department of Rural Development and Panchayat Raj

சமுதாயத் திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை வலுப்படுத்தும் விதமாக வேளாண்மை கால்நடை மற்றும் பண்ணை சாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள பயிற்றுநர் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படும் அரசு திட்டம்.

இத்திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவிநாசி, உடுமலைப்பேட்டை, குண்டடம் மற்றும் பொங்கலூர் ஆகிய ஐந்து வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது.

இவ்வட்டாரங்களில் வட்டாரங்களில் அமைக்கப்படும் சமுதாயத் திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை வலுப்படுத்தும் விதமாக வேளாண்மை கால்நடை மற்றும் பண்ணை சாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள பயிற்றுநர் (District Resource Person) நியமிக்கப்பட உள்ளனர்.

மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு வேளாண்மை , தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் அல்லது தொடர்புத் துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

தொடர்புடைய துறையில் 10 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தொடர்புடைய மாவட்டத்தைச் சேர்ந்தவராக அல்லது அம்மாவட்டத்தில் குடியேறியவராக இருத்தல் வேண்டும்.

மதிப்பு சங்கிலி ஒருங்கிணைத்தல் மற்றும் வேளாண் பொருட்களை மேம்படுத்துவதில் போதிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

சர்வதேச நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், சிவில் சொசைட்டியில் பணி புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு ஒரு நாளுக்கான மதிப்பூதியம் ரூபாய் 2000 மற்றும் உள்ளூர் போக்குவரத்திற்காக ரூபாய் 250 வழங்கப்படும்.

பணி ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும்.

மேற்படி பணிகளுக்கான விண்ணப்பங்கள் (https://bit.ly/38zmZPo) 10.6.2022 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விடலாம்.

மாவட்ட செயல் அலுவலர்,
வாழ்ந்து காட்டுவோம் திட்டம்,
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டம்,
மாவட்ட திட்ட மேலாண்மை அலகு ,713 & 714 மாவட்ட ஆட்சியரக 7-வது தளம்,திருப்பூர் மாவட்டம்

TN Rural Development and Panchayat Raj Recruitment 2022 Click here

TN Rural Development and Panchayat Raj Recruitment 2022 Click here

TN Rural Development and Panchayat Raj Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *