Tamilnadu Govt Village Assistant Job-Dindigul West Recruitment 2020

திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு கிராமங்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

கிராமத்தின் பெயர்கள் பலக்கனூத்து, அலக்குவார்பட்டி,கோடல்வாவி, தோணிமலை, பன்றிமலை, சிரங்காடு ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

கிராம உதவியாளர் காலிப்பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இட ஒதுக்கீடு விபரங்கள் வருமாறு:

பன்றிமலை கிராமம் :

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சீர்மரபினர் ( MBC /DNC ) வகுப்பினரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

அலக்குவார்பட்டி கிராமம் :

பழங்குடியினர் (பொது) வகுப்பினரைச் சேர்ந்த ( ஆண் /பெண் ) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

கோடல்வாவி கிராமம் மற்றும் பலக்கனூத்து கிராமம் ( கிராம உதவியாளர் வேலை ) :–

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) வகுப்பினரைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

சிரங்காடு கிராமம் :

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) வகுப்பினரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

தோணிமலை கிராமம் :

( MBC /DNC ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சீர்மரபினர்வகுப்பினரைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

வயது வரம்பு :-

வயது 01.08.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்

அதிகபட்சம் 35 ஆண்டுகள்
(அதிகபட்சம் இதர பிரிவு 30 வயது, பி.வ./மி.பி.வ. 32 வயது, தா.வ./பழங்குடியினர் 35 வயது) இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். மேற்படி பதிவு, நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை வருகின்ற 20.11.2020-ம் தேதிக்குள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.01.2021

Official Notification Click here

நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் இதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் . தற்போது புதியதாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Notification Full Details Video Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *