TN GOVT Village Assistant Recruitment 2020 – 5th Pass

செ.வெ.எண்:-17/2020

நாள்:-12.10.2020

திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராமங்களுக்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராமங்களுக்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு விபரங்கள் பின்வருமாறு:

1.மட்டப்பாறை கிராமம்-கிராம உதவியாளர் – பொதுப்பிரிவு பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்கள்.

2.சித்தர்கள்நத்தம் கிராமம் –கிராம உதவியாளர் வேலை – பிசி (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) – பொது – முன்னுரிமையுள்ளவர்கள்,

3.குல்லலக்குண்டு கிராமம்- கிராம உதவியாளர் வேலை – பொது பிரிவு – பொது – முன்னுரிமையுள்ளவர்கள்,

4.விருவீடு கிராமம்- கிராம உதவியாளர் வேலை – எஸ்சி – பொது –முன்னுரிமையற்றவர்,

5.மல்லணம்பட்டி கிராமம்-கிராம உதவியாளர் வேலை – எம்பிசிஃடிஎன்சி – பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்கள்,

6.மாலையகவுண்டன்பட்டி கிராமம்-கிராம உதவியாளர் வேலை – பிசி (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) – பொது –முன்னுரிமையற்றவர்,

7.குன்னுவாரன்கோட்டை கிராமம்-கிராம உதவியாளர் வேலை – பொது பிரிவு – பொது –முன்னுரிமையற்றவர்,

8.கணவாய்பட்டி கிராமம்-கிராம உதவியாளர் வேலை – எஸ்.சி., – பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்.

கிராம உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வித்தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு : காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும்பொழுது, கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ள கிராமம் அல்லது 2 கிலோ மீட்டர் சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவில் தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில், காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.

தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி சான்றிதழ் நகல் , இருப்பிடம் சான்றிதழ் நகல், வயது சான்றிதழ் நகல். ஜாதி சான்றிதழ் நகல் ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 22.10.2020-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிலக்கோட்டை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *