செ.வெ.எண்:-20/2020
நாள்:-14.10.2020
குஜிலியம்பாறை வட்டத்தில் காலியாக உள்ள 9 கிராமங்களுக்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்தில் காலியாக உள்ள 9 கிராமங்களுக்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு விபரங்கள் பின்வருமாறு:
1.கருங்கல் கிராமம்-கிராம உதவியாளர் வேலை- ஜிடி-பொது பிரிவு – (பொது) முன்னுரிமையுள்ளவர்,
2.வடுகம்பாடி கிராமம்-கிராம உதவியாளர் வேலை – எஸ்.சி.(ஏ) – அருந்ததியர் (பெண்கள்)/ அருந்ததியர் (ஆதரவற்ற விதவை),
3.திருக்கூர்ணம் கிராமம்-கிராம உதவியாளர் வேலை – எம்பிசி/டிஎன்சி – முன்னுரிமையுள்ளவர்கள்,
4.குளத்துப்பட்டி கிராமம்-கிராம உதவியாளர் வேலை – பிசி – (பிற்பட்ட வகுப்பினர் முஸ்லீம் நீங்கலாக) – (பொது)
முன்னுரிமையுள்ளவர்கள்,
5.கூம்பூர் கிராமம்-கிராம உதவியாளர் வேலை – ஜிடி – பொதுப்பிரிவு – முன்னுரிமையற்றவர்கள் (பெண்கள்)/(ஆதரவற்ற
விதவைகள்),
6.சின்னுலுப்பை கிராமம்-கிராம உதவியாளர் வேலை – எஸ்சி – (பொது) முன்னுரிமையுள்ளவர்கள்,
7.தோளிப்பட்டி கிராமம் -கிராம உதவியாளர் வேலை– எம்பிசி/டிஎன்சி – முன்னுரிமையற்றவர்கள் (பெண்கள்) /(ஆதரவற்ற
விதவை),
8.கரிக்காலி கிராமம்-கிராம உதவியாளர் வேலை – பிசி-(பிற்பட்ட வகுப்பினர் முஸ்லீம் நீங்கலாக) – முன்னுரிமையற்றவர்
(பெண்கள்) / (ஆதரவற்ற விதவை),
9.ஆர்.புதுக்கோட்டை கிராமம்-கிராம உதவியாளர் வேலை – ஜிடி – பொது பிரிவு – முன்னுரிமையற்றவர்.
கிராம உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் குஜிலியம்பாறை வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி சான்றிதழ் நகல் , இருப்பிடம் சான்றிதழ் நகல், வயது சான்றிதழ் நகல். ஜாதி சான்றிதழ் நகல் ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 02.11.2020-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.