கோவை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணி மற்றும் சமையல் உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், சத்துணவு அமைப்பாளர் பணி மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி :
சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : குறைந்த பட்சம் கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பழங்குடியினர் வகுப்பு : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது 8-ஆம் தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சமையல் உதவியாளர் பதவிக்கான கல்வித்தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது 5-ஆம் தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதிகபட்சம் வயது 40 -க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதிகபட்சம் 40 -க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் : குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் , அதிகபட்சம் 40 -க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் குடியிருக்கும் இடத்திற்கும் காலியாக உள்ள சத்துணவு மையத்திற்கும் இடையே உள்ள தூரம் 3 கி .மீ க்குள் அப்போதுதான் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை :
கல்விச்சான்று நகல் , ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அட்டை வயது சரி பார்க்க அத்தாட்சி நகல் பிற தேவைப்படும் நகல்கள் அனைத்தையும்
விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் :
காலிப்பணியிடம் மற்றும் இனசுழற்சி விவரம் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் , நகராட்சி , மாநகராட்சி அறிவிப்பு பலகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஊராட்சி ஒன்றியம் , நகராட்சி , மாநகராட்சி அலுவலகங்களில் செப் -9 க்குள் அளித்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
Mode Of Selection : நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி : 9.09.2020
விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு : 19.9.2020