Nattarasankottai Town Panchayat Recruitment 2020

சிவகங்கை மாவட்டம் , நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் காலியாக உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர் பணி / காவலர் பணி மற்றும் தெரு விளக்கு மின்பணியாளர் நிலை -2 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடகளுக்கு வரும் 02.09.2020 -ஆம் தேதி புதன் கிழமை காலை 11.30 மற்றும் 12.30 மணியளவில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் : மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர் பணி / காவலர் பணி

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விகிதம் : ரூ .15700-50000

வயது : 01.01.2020 அன்று உள்ளபடி 21 முடிவடைந்திருக்க வேண்டும்.

நியமன இன சுழற்சி : பொது போட்டி – 1 ( முன்னுரிமை அற்றவர்கள் )

பணி : மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குதல் மற்றும் பாதுகாத்தல் செயல் அலுவலரால் தெரிவிக்கப்படும் அனைத்து வேலைகளும் செய்தல்.

பதவியின் பெயர் : தெரு விளக்கு மின்பணியாளர் நிலை -2

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Electrician in ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விகிதம் : ரூ .19500-62000

வயது : 01.01.2020 அன்று உள்ளபடி 21 முடிவடைந்திருக்க வேண்டும்.

நியமன இன சுழற்சி : பொது போட்டி – 1 ( முன்னுரிமை அற்றவர்கள் )

பணி : தெரு விளக்குகள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயல் அலுவலரால் தெரிவிக்கப்படும் அனைத்து வேலைகளும் செய்தல்.

விண்ணப்பிக்கும் முறை :

  1. விண்ணப்பங்கள் பதிவு அஞ்சலில் ( Reg. Post Only ) மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
  2. விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
  3. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பத்துடன் கல்விச்சான்று நகல், சாதி சான்று நகல் , இருப்பிடச் சான்று நகல் , ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ,
    வேலைவாய்ப்பிற்கான பதிவு அட்டை நகல், முன்னுரிமை பெற்றுயுள்ளமைக்கான சான்று நகல் , அனுபவ சான்று நகல் ஆகியவற்றின் சான்றிடப்பட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
  4. நேரில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  5. விண்ணப்பிக்க எந்தவிதமான கட்டணமும் கிடையாது ( NO FEE )

Mode Of Selection :- நேர்காணல் ( Interview )

பேரூராட்சியில் நடைபெற உள்ள நேர்காணலுக்கு தகுதியுள்ள நபர்களுக்கு நேர்காணல் குறித்த விவரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணலின் போது அனைத்து அசல் சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயல் அலுவலர் ,நாட்டரசன்கோட்டை பேரூராட்சி,சிவகங்கை (வட்டம்),சிவகங்கை மாவட்டம் அஞ்சல் குறியீடு எண் : 630 556

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.08.2020

மேலும் கூடுதல் விபரங்களை அலுவலக வேலை நாட்களில் , அலுவலக வேலை நேரங்ககளில் நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் அலுவலகத்தில் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

விண்ணப்பபடிவங்கள் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு அறிவிப்பு டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *